3ஆவது தெற்கு உச்சி மாநாட்டில் சீனப் பிரதிநிதியின் உரை
2024-01-22 20:05:51

உகாண்டாவில் ஜனவரி 21ஆம் நாள் தொடங்கிய 3ஆவது தெற்கு உச்சி மாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினருமான லீயூ கொ ட்சொங் உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், இவ்வாண்டு 77 நாடுகள் குழுமம் நிறுவப்பட்ட 60ஆம் ஆண்டு நிறைவாகும். கடந்த 60ஆண்டுகளாக, தெற்கு நாடுகள், சமத்துவம், பரஸ்பர நன்மை, வெற்றி-வெற்றி, ஒற்றுமை மற்றும் பரஸ்பர உதவி ஆகிய தன்மைகளுடைய பாதையில் பயணித்து வருகின்றன என்று தெரிவித்தார்.

மேலும், வளரும் நாடுகளில் ஒன்றாகவும், தெற்குலக நாடுகளின் ஒன்றாகவும் திகழ்கின்ற சீனா, எப்போதும் இதர வளரும் நாடுகளுடன் சேர்ந்து சுவாசிக்கவும் அதே விதியைப் பகிரவும் செயல்பட்டு வருகின்றது. வெளிநாட்டுக்கான ஒத்துழைப்புக்கு தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு என்பதை சீனா தொடர்ந்து முன்னுரிமையாக்கி, தெற்கு நாடுகளின் கூட்டு வளர்ச்சிக்குப் பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார்.