சின்சியாங்கில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் நிகழ்ந்தது
2024-01-23 15:08:35

சீனாவின் சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் அக்சு மாவட்டத்தைச் சேர்ந்த வூஷ் வட்டத்தில் ஜனவரி 23ஆம் நாள் விடியற்காலையில் 2 மணியளவில், ரிக்டர் அளவு கோலில் 7.1ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தின் மையம் 22 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.

சீன நிலநடுக்கம் நெட்வொர்க்ஸ் மைய இணையத்தளம் வெளியிட்ட தரவுகளின்படி ஜனவரி 23ஆம் நாள் 8 மணி வரை, ரிக்டர் அளவு கோலில் 3.0 பதிவுக்கு மேல், நில அதிர்வுகள் 40 முறையாக நிகழ்ந்துள்ளன.