பயங்கரவாத எதிர்ப்புக்கான உலகாவிய மேலாண்மையில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கும் சீனா
2024-01-23 20:07:03

சீன அரசவை தகவல் தொடர்புப் பணியகத்தின் சார்பில், பயங்கரவாத எதிர்ப்புக்கான சீனாவின் சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய வெள்ளையறிக்கை வெளியிடப்பட்டது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் 23ஆம் நாள் கூறுகையில், பல்வேறு நாடுகளுடன் பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பயங்கரவாத எதிர்ப்புக்கான உலகளாவிய ஆட்சிமுறையில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கவும் சீனா விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், சமத்துவ மதிப்பு அளிக்கும் அடிப்படையில் இத்துறைச் சார பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேற்கொண்டு, உலகளவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.