பயங்கரவாத எதிர்ப்புக்கான சீனாவின் சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு
2024-01-23 09:51:24

பயங்கரவாத எதிர்ப்புக்கான சீனாவின் சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய வெள்ளையறிக்கையை, சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜனவரி 23ஆம் நாள் வெளியிட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு, சர்வதேச சமூகத்தின் பொது பொறுப்பாகும். பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை உருவாக்கத்துக்கு சீனா எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய பயங்கரவாத எதிர்ப்பு வழிமுறைகளை சீனா தேடி கண்டறிந்து, தேசிய பாதுகாப்பு, பொது பாதுகாப்பு, மக்களின் உயர் மற்றும் சொத்து பாதுகாப்பு ஆகியவற்றைப் பெரிதும் பேணிக்காத்து, உலக மற்றும் பிரதேச நிலைத் தன்மைக்குப் பங்காற்றியுள்ளது என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், சீனா, உலகத்தின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து, மனித குலப் பொது எதிர்காலச் சமூகம் என்ற சிந்தனையின் வழிகாட்டலுடன், பயங்கரவாத எதிர்ப்பில் ஆக்கமுடன் பங்கெடுக்க விரும்புவதாகவும், சமத்துவம் மற்றும் மதிப்பளிப்பதன் அடிப்படையில், பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.