சீன-நவ்ரு தூதாண்மையுறவு மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது பற்றிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் கருத்து
2024-01-24 18:02:59

சீனாவுக்கும் நவ்ருவுக்கும் இடையே தூதாண்மை உறவு மீண்டும் தொடங்கியது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் 24ஆம் நாள் கூறுகையில்,

நவ்ரு சீனாவுடன் தூதாண்மையுறவை நிறுவியுள்ள 183ஆம் நாடாகும். உலகில் ஒரேயொரு சீனா மட்டும் உள்ளது, சீன மக்கள் குடியரசின் அரசாங்கம் சீனா முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டபூர்வமான அரசாங்கமாகும், தைவான், சீனாவின் உரிமைப்பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும் என்பதை இரு நாடுகளுக்கிடையே தூதாண்மையுறவு மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது மீண்டும் நிரூபித்துள்ளது. இது, மறுக்கப்பட முடியாத உண்மை. தவிரவும், இது, சர்வதேச சமூகத்துக்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருத்தாகவும், சர்வதேச உறவுகளில் அடிப்படையான கோட்பாடாகவும் விளங்குகின்றது என்று தெரிவித்தார்.