நேட்டோவின் பெரிய அளவிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவப் பயிற்சி தொடக்கம்
2024-01-25 10:24:30

2024ஆம் ஆண்டு உறுதியான பாதுகாவலர் என்ற நேட்டோவின் அட்லாண்டிக் கடல்கடந்த ராணுவப் பயிற்சி ஜனவரி 24ஆம் நாள் தொடங்கியது. இது மே 31ஆம் நாள் வரை நடைபெறும்.

இந்த இராணுவப் பயிற்சி பல இடங்களில் நடைபெறுகிறது. இதில் முதல்முறையாக நேட்டோ நாடுகளின் புதிய பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 31 உறுப்பு நாடுகள், கூட்டாளி நாடான ஸ்வீடன் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 90 ஆயிரம் படை வீரர்கள் கலந்து கொள்கின்றனர். நேட்டோவின் பல தசாப்தங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரிய இராணுவ பயிற்சி இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.