கனடா-பிரிட்டன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்
2024-01-26 10:32:35

கனடாவின் ஒலிபரப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பிரிட்டன் அரசின் முன்முயற்சியின் பேரில், கனடா மற்றும் பிரிட்டன் தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் நேரப்படி ஜனவரி 25ஆம் நாள் கனடா வர்த்தக அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

முன்னதாக 2022ஆம் ஆண்டின் மார்ச் 24ஆம் நாள்,  கனடாவுடன் தாராள வர்த்தகப் பேச்சுவார்த்தையைப் பிரிட்டன் தொடங்கியுள்ளதாக பிரிட்டனின் சர்வதேச வர்த்தக அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெல்யன் தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சுவார்த்தையானது, சேவைத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்துதல், டிஜிட்டல் தொழில் மற்றும் பசுமைத் தொழில் துறையின் வர்த்தகத்தை ஆழப்படுத்துதல், பிரிட்டனில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.