குட்ரேஸ்:எல்லா வடிவிலான பகைமைகளையும் வேரோடு ஒழிக்க வேண்டும்
2024-01-27 18:34:34

ஜனவரி 27ஆம் நாள், படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் 26ஆம் நாள் கூறுகையில், சர்வதேசச் சமூகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு, சியோனிசம் எதிர்ப்பு உள்ளிட்ட எல்லா வடிவிலான பகைமைகளையும் வேரோடு ஒழிக்க வேண்டும் என்றார்.

மேலும், தற்போது பகைமைகள் உலகளவில் பரவி வருகின்றன. இந்நிலையில், அனைவரும் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களின் குரலைக் கேட்டறிந்து, மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்து, பாதுகாப்பு மற்றும் சகிப்பு வாய்ந்த பாதையை நாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

2005ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள், 60ஆவது ஐ.நா பொது பேரவையில் 104 நாடுகள் கூட்டாக முன்வைத்த வரைவுத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆண்டுதோறும் ஜனவரி 27ஆம் நாள், படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.