இலங்கையில் 31 நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள்
2024-01-27 18:02:47

இலங்கையில் 31 அடையாளம் காணப்பட்ட நீர்த்தேக்கங்களில், மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் மேலும் 3,077 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் இலங்கையின் நீர்ப்பாசன அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த புதுமையான அணுகுமுறை, நாட்டின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும் என்று அவர் தெரிவித்தார்.

 பிப்ரவரி 15 ஆம் நாளுக்குள் "உமா ஓயா" திட்டமானது, தேசிய மின் கட்டத்திற்கு 120 மெகாவோட் மின்சாரத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்றும் அவர் மேலும் கூறினார். 

 மேலும் இலங்கையின் நீர்ப்பாசன அமைச்சுக்கு, 7 கோடியே 34 லட்சம்  அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 2 கோடியே 71 லட்சம் அமெரிக்க டாலர்கள் நீர்த்தேக்க பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.