சீனாவின் முக்கிய பண்பாட்டுத் தொழில் துறையின் வளர்ச்சி
2024-01-30 14:53:30

சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் ஜனவரி 30ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, தேசிய அளவில் 73 ஆயிரம் முக்கிய பண்பாட்டுத் தொழில் துறையில் ஈடுபடும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2023ஆம் ஆண்டில், சீனப் பண்பாட்டுத் தொழில் நிறுவனங்களின் வருமானத் தொகை 12 இலட்சத்து 95 ஆயிரத்து 150 கோடி யுவானை எட்டியது. இது, 2022இல் இருந்ததை விட 8.2 விழுக்காடு அதிகரித்தது. இதில் புதிதாக வளரும் 16 துறைகளிலுள்ள பண்பாட்டுத் தொழில் நிறுவனங்களின் வருமானம் 5 இலட்சத்து 23 ஆயிரத்து 950 கோடி யுவான், 2022இல் இருந்ததை விட 15.3 விழுக்காடு அதிகம். சீனப் பண்பாட்டுத் தொழில் நிறுவனங்களின் இலாபம் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 660 கோடி யுவானாகும். இது, 2022இல் இருந்ததை விட 30.9 விழுக்காடு அதிகரித்தது. கடந்த ஆண்டு இறுதி வரை, பண்பாட்டு நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு 19 இலட்சத்து 62 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 2022இல் இருந்ததை விட 7.6 விழுக்காடு அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.