"தைவான் சுதந்திரத்தை" ஆதரிக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும்
2024-01-31 14:57:57

சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகம் ஜனவரி 31ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பெருநிலம் மற்றும் தைவான் தொடர்பான சமீபத்திய பரபரப்பான பிரச்சனைகள் குறித்த கேள்விகளுக்கு செய்தி தொடர்பாளர் சென் பின்ஹுவா பதிலளித்தார்.

அமெரிக்கா உள்ளிட்ட சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவிய நாடுகளுக்கும், சீன தைவான் பகுதிக்கும் இடையே எந்தவொரு அதிகாரப்பூர்வ தொடர்பை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம் என்றும், அமெரிக்க அரசின் ஒரு பகுதியான அமெரிக்கப் பேரவை, ஒரே சீனா கொள்கை மற்றும் சீன-அமெரிக்க மூன்று கூட்டு அறிக்கையின் விதிகளைப் பின்பற்றி, "தைவான் சுதந்திரத்தை" ஆதரிக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி, "தைவான் சுதந்திரம்" பற்றிய பிரிவினைவாத சக்திகளுக்கு தவறான தகவல்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.