வட்டமேசைக் கூட்டங்களின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்களைத் தீர்க்க தொடரும் சீனா
2024-02-02 11:06:14

2023ஆம் ஆண்டில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கான மொத்தம் 15 வட்டமேசைக் கூட்டங்களை சீன வணிக அமைச்சகம் நடத்தி, அவற்றின் 300க்கும் மேற்பட்ட சிக்கல்களைத் தீர்த்துள்ளது என்றும், இதையடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்களைத் தொடர்ந்து தீர்க்கும் வகையில், சீன வணிக அமைச்சகம் மாதாந்திர வட்டமேசைக் கூட்டத்தை நடத்தும் என்றும், இந்த அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் பிப்ரவரி 1ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 2023ஆம் ஆண்டின் செப்டம்பரில் சீன வணிக அமைச்சகம் வெளிநாட்டு நிறுவனங்களின் சிக்கல்களை சேகரித்து தீர்ப்பதற்கான அமைப்பைத் தொடங்கி, இணையவழி வெளிநாட்டு நிறுவனங்களுக்கான வட்டமேசை கூட்டத்தை நடத்தியது. இது மேலதிக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, சிக்கல்களை வெளிப்படுத்த ஒரு வழியை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.