ஐ.நா.அதிகாரிகளின் வசந்த விழா வாழ்த்துக்கள்
2024-02-05 20:03:09

அண்மையில் ஆஸ்திரியாவின் வியன்னாவிலும் கென்யாவின் நைரோபியிலும் நடைபெற்ற சீன வசந்த விழா விருந்துகளில், ஐ.நா.வின் உயர் நிலை அதிகாரிகள், சீன மக்களுக்கு நல்வாழ்த்துக்களையும்,  டிராகன் ஆண்டில் உலகில் அமைதி மற்றும் செழுமை பெறட்டும் என்ற வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

ஜனவரி 31ஆம் நாள், வியன்னாவில் உள்ள சீன நிரந்தர பிரதிநிதிக் குழு வியன்னா சர்வதேச மையத்தில் வசந்த விழாவுக்கான விருந்தை நடத்தியது. இது, சீன நிரந்தரப் பிரதிநிதிக் குழு வியன்னாவிலுள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் நடத்திய முதலாவது வசந்த விழா கொண்டாட்ட நிகழ்வு. இந்நிகழ்வில், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ஜெனரல் ரபேல் குரோஸி, ஐ.நா.தொழில்துறை வளர்ச்சி அமைப்புத் தலைமை இயக்குனர் முல்லர் முதலியோர் சீனர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். வியன்னாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் பொது இயக்குநர் கடா வாலிஉரைநிகழ்த்தியபோது, வறுமை ஒழிப்பு, கல்வி வளர்ச்சி, தொழில் மயமாக்கல் முதலிய துறைகளில் சீனாவின் பங்கு பாராட்டுக்குரியது என்றார்.