ஷிச்சின்பிங்-புதின் தொலைபேசி தொடர்பு
2024-02-08 20:36:31

சீனப் புத்தாண்டை முன்னிட்டு சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ரஷிய அரசுத்தலைவர் புதினுடன் பிப்ரவரி 8ஆம் நாள் மாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது இரு தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஷிச்சின்பிங் கூறுகையில் வரும் டிராகன் ஆண்டில் சீனர்கள் விருப்பமும் நம்பிக்கையும் நிறைந்து காணப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டினார். புதின் சீனர்களுக்கு டிராகன் ஆண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இவ்வாண்டு சீனாவும் ரஷியாவும் தூதாண்மை உறவை நிறுவிய உருவாக்கிய 75ஆவது ஆண்டுநிறைவாகும். எதிர்காலத்தில் சீன-ரஷிய உறவு புதிய வளர்ச்சி அறைகூவலை எதிர்நோக்குகின்றது. சீனா, ரஷியாவுடன் கைகோர்த்து, இரு நாட்டுறவின் புதிய வரலாற்றைப்படைக்க வேண்டும் என்றும் விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.