இந்தியாவில் ஏஐ துறையில் 20 லட்சம் பேருக்குப் பயிற்சி – மைக்ரோசாப்ட்
2024-02-08 19:29:43

இந்தியாவில் 2025-க்குள் செயற்கை நுண்ணறிவுத் துறையில் திறன்களை வளர்த்துக் கொள்ளும் விதம் 20 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு கொண்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெல்லா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தியாவில் ஏஐ துறையை துரிதப்படுத்தும் விதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விரிவான செயல்திட்டத்தின் அடிப்படையில் இப்புதிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏஐ திறமையில் உள்ள இடைவெளியை நீக்குவதற்காக அரசு மற்றும் தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்துள்ளதாகவும் இதன்மூலம் நாட்டில் புதிய வாய்ப்புகளைத் தோற்றுவிக்க உள்ளதாகவும் நாதெல்லா தெரிவித்தார்.