சீனாவுக்கும் போர்ச்சுகலுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2024-02-08 15:26:46

சீனாவுக்கும் போர்ச்சுகலுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 8ஆம் நாள் போர்ச்சுகல் அரசுத் தலைவர் மார்கெலோ ரெபெலோ டி சோசா ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.

போர்ச்சுகல் அரசுத் தலைவர் டி சோசாவுடன் இணைந்து பாடுபட்டு, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவைத் தொடர்ந்து ஆழமாக்கி, இரு நாட்டு மக்களுக்குச் சிறந்த பலன் அளித்து, சீனா-ஐரோப்பிய நாடுகளின் உறவு, ஆரோக்கியமான மற்றும் நிதானமான வளர்ச்சியை முன்னேற்றி, உலக அமைதி, நிதானம் மற்றும் செழிப்புக்குப் பங்களிக்க விரும்புகின்றது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

சீனாவுடன் கூட்டாகப் பாடுபட்டு, நட்புறவைத் தொடர்ந்து முன்னெடுத்து, இரு நாட்டுறவின் மேலதிக வளர்ச்சியை முன்னேற்ற போர்ச்சுகல் விரும்புகின்றது என்று டி சோசா தெரிவித்தார்.