வங்காளத்தேசத்தின் மின் வினியோகத்துக்கு சீன முதலீட்டு நிறுவனங்களின் பங்கெடுப்பு
2024-02-10 17:04:40

வங்காளத்தேசத்தில் சீன முதலீட்டு நிறுவனங்களால் கட்டியமைக்கப்பட்ட தேசிய மின் தொகுப்புக்கான மேம்பாட்டுத் திட்டப்பணியைச் சேர்ந்த முதலாவது மார்க்கம் பிப்ரவரி 8ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக இயங்கத் துவங்கியது. வங்காளத்தேசத்தின் வடமேற்கு பகுதியின் ராஜ்ஷாஹி பகுதியில் மின்சார பரிமாற்றத் திறன் பெருமளவில் உயர்ந்துள்ளது என்பதை இது காட்டியுள்ளது.

வங்காளத்தேசத் தேசிய மின் தொகுப்பு நிறுவனத்தின் நிர்வாகத்திலுள்ள சுமார் 99 மின் மாற்று நிலையங்கள் மற்றும் 1000 கிலோமீட்டர் நீளமுடைய மின் பரிமாற்ற மார்க்கத்துக்கான மேம்பாட்டுப் பணி முதலியவை இத்திட்டப்பணியில் அடங்கின.

முழுமையாகாத புள்ளிவிபரங்களின்படி, இதுவரை, வங்காளத்தேசத்தின் மின் நிலையக் கட்டுமானத்தில், சீன முதலீட்டு நிறுவனங்களின் பங்கெடுப்பு அளவு 9038 மெகாவாட் தாண்டி, அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் உயர்வேக வளர்ச்சிக்கு, நிதானமான மின் வினியோகத்தை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.