காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் சாவு
2024-02-12 16:11:47

பாலஸ்தீன செய்தி ஊடகம் வெளியிட்ட தகவலின்படி 12ஆம் நாள் விடியற்காலையில் இஸ்ரேல் ராணுவம் காசா பிரதேசத்தின் தென்பகுதியிலுள்ள ராஃபா நகர் மற்றும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளின் மீது பன்முக தாக்குதலை நடத்தியது. இதுவரை இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மகளிர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பல நூறு பேர் காயமுற்றனர்.

அன்று இஸ்ரேல் ராணுவம் ராஃபா நகரின் மையப் பகுதியின் மீது குறைந்தது 40 கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இவற்றில் குடியிருப்புப் பிரதேசங்கள் மற்றும் மசூதிகள் முக்கிய இலக்குகளாகும். இந்நகரிலுள்ள மருத்துவமனைகளில் உள்ள காயமுற்றவர்களில் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் செய்தி வெளியிட்டது.