மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் வாங்யீ பங்கெடுப்பு
2024-02-15 16:29:57

மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தின் தலைவர் ஹியூஸ்கென், ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சர் அல்வரேஸ், பிரான்ஸ் அரசுத் தலைவரின் வெளிவிவகார ஆலோசகர் பொன்னே ஆகியோரின் அழைப்பை ஏற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ பிப்ரவரி 16 முதல் 21ஆம் நாள் வரை நடைபெறும் 60வது மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் பங்கெடுப்பதோடு, சொற்பொழிவு ஆற்றி, முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து, சீனாவின் நிலைப்பாட்டை அறிமுகம் செய்யவுள்ளார். மேலும், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் அவர் பயணம் மேற்கொண்டு, பிரான்ஸில், சீன-பிரான்ஸ் நெடுநோக்கு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் தெரிவித்தார்.