உலக எரிசக்தி துறை சந்தித்த தொடர்ச்சியான அச்சுறுத்தல்
2024-02-15 16:27:13

சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் 2024ஆம் ஆண்டு அமைச்சர் நிலை கூட்டமும், இந்நிறுவனம் நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவு நடவடிக்கையும் 13, 14 ஆகிய நாட்களில் பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்றது. எரிசக்தி பாதுகாப்பைப் பேணிக்காப்பது, தூய்மையான எரிசக்தி வளர்ச்சியை வேகப்படுத்துவது, சர்வதேச எரிசக்தி ஒத்துழைப்பை ஆழமாக்குவது ஆகியவற்றில் இவை கவனம் செலுத்துகின்றன.

இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, சர்வதேச எரிசக்தி பாதுகாப்பு தொடர்ச்சியான அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றது. எரிசக்தியின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்து, எரிசக்தியின் பயனை உயர்த்த வேண்டும். காலநிலை மாற்றம், மாசுபாடு, உயிரினப் பல்வகைமையின் மீதான பாதிப்பு ஆகிய எரிசக்தியுடன் தொடர்பான அச்சுறுத்தலைச் சமாளிக்க சர்வதேச எரிசக்தி நிறுவனம் ஆயத்தம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.