கொழும்புவில் இலங்கை-சீனப் பண்பாட்டு நிழற்படக் கலைக் கண்காட்சி
2024-02-17 22:52:41

ஒரு வாரம் நீடிக்கும் இலங்கை மற்றும் சீனப் பண்பாட்டு நிழற்படக் கலைக் கண்காட்சி 16ஆம் நாள் கொழும்புவில் துவங்கியது. இரு நாட்டு பாரம்பரிய நட்பை மேலும் வெளிக்கொணரவும், இரு நாட்டு பண்பாடுகளுக்கிடையேயான பரிமாற்றத்தை முன்னேற்றவும் நடைபெறும் இக்கண்காட்சி, உள்ளூர் மக்கள் மற்றும் சீனப் பயணிகளை ஈர்த்துள்ளது.

இரு நாடுகளைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்களின் 300க்கும் மேற்பட்ட படைப்புகள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இரு நாட்டு இயற்கைக் காட்சி, வரலாற்று முக்கியத்துவமான இடங்கள், திருவிழாக் காட்சி உள்ளிட்ட அம்சங்கள் இந்தப் படைப்புகளில் அடக்கம்.