ஃபூஜியன் கடற்காவற்துறை பணியகம் நடத்திய வழக்கமான சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு
2024-02-18 15:14:40

ஃபூஜியன் கடற்காவற்துறை பணியகம் கடல்சார் சட்ட அமலாக்கச் சக்தியை வலுப்படுத்தி, சியாமன், குவாஞ்சோ மற்றும் ஜின்மென் ஆகிய கடல் பகுதியில் வழக்கமாக சட்ட அமலாக்க  நடவடிக்கையை மேற்கொள்ளும். இது குறித்து, சீன அரசவை தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜு ஃபெங் லியன் கூறுகையில், பிப்ரவரி 14ஆம் நாள் பெருநிலப்பகுதியைச் சேர்ந்த மீன்பிடிப் படகுகளை தைவான் வட்டாரம் கொடூரமாக விரட்டியடித்ததால் இரண்டு மீனவர்கள் உயிரிழந்தனர். இச்செயல் இரு கரை சக நாட்டவர்களின் உணர்ச்சியைக் கடுமையாகப் புண்படுத்தி இரு கரை உறவைக் கடுமையாகச் சீர்குலைத்துள்ளது. இந்நிலையில், ஃபூஜியன் கடற்காவற்துறை பணியகம் நடத்திய இந்தச் சட்ட அமலாக்க நடவடிக்கை, தொடர்புடைய கடற்பரப்பின் இயல்பான ஒழுங்கைப் பேணிக்காக்கத் துணைபுரிவதோடு, பெருநிலப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் உயிர் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பையும் உத்தரவாதம் செய்யும் என்பதால் இந்நடவடிக்கைக்கு உறுதியான ஆதரவு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.