1.7 கோடியைத் தாண்டிய 2024 ஆம் ஆண்டு வசந்த விழா பயணங்கள்
2024-02-18 11:02:18

சீன இரயில்வே குழுமத்தைச் சேர்ந்த ஷாங்காய் இரயில்வே நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டின் பிப்ரவரி 17ஆம் நாள் வரை, 8 நாட்கள் நீடித்த சீனாவின் வசந்த விழா விடுமுறை காலத்தில், யாங்சி கழிமுகப்பிரதேசத்தில் பயணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 70 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. நாளுக்கு சுமார் 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேலான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பயணங்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 60 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 18ஆம் நாள், விடுமுறைக்குப் பிறகு முதலாவது பணி தினமாகும். இதே நாளில், சுமார் 25 இலட்சத்து 20 ஆயிரம் பயணங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. பிப்ரவரி 25ஆம் நாளுக்கு வரை, சொந்த ஊரிலிருந்து பணி புரியும் இடங்களுக்குச் செல்வோரின் பயணங்கள் தொடரக்கூடும் என்று சீன இரயில்வே வாரியம் மதிப்பிட்டுள்ளது.