இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா ஆதரவு
2024-02-20 19:34:06

பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட புதிய மோதல் பற்றிய வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா ஐ.நா.விடம் தாக்கல் செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் 19ஆம் நாள் செய்தி வெளியிட்டது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையேயான தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஆதரவளிப்பதாகவும், இஸ்ரேல் படை காசாவின் தென் பகுதியிலுள்ள ராஃபா நகர் மீது தாக்குதல் நடத்துவதை எதிர்ப்பதாகவும் இந்த வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையில், இஸ்ரேல் ராஃபா நகரில் பெரிய அளவிலான தரை வழித் தாக்குதல் நடத்தினால், பாலஸ்தீன மக்கள் அதிக பாதிப்பு அடைந்து, அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய நேரிடும். இது, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா கருதுவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.