உக்ரைன் நெருக்கடி பிரச்சினையை வாய்ப்பாக கொண்டு நலன் பெறாது:சீனா
2024-02-20 18:44:46

சீனாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு காரணமாக, சீனத் தொழில்நிறுவனங்கள் மீது தடை விதிப்பதை அமெரிக்கா கருத்தில் கொண்டுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் 20ஆம் நாள் கூறுகையில்,

உக்ரைன் நெருக்கடியில், சீனா எப்போதும் ஒரு புறநிலை மற்றும் நேர்மையான நிலைப்பாட்டை கடைபிடிக்கிறது. அதே வேளையில், அமைதிக்கான பேச்சுவார்த்தையை முன்னேற்றும் பணியில் ஈடுபடுகின்றது என்று தெரிவித்தார்.

தவிர, உலகின் பல்வேறு நாடுகளுடன் சீரான ஒத்துழைப்பு மேற்கொள்ளும் உரிமையைச் சீனா கொண்டுள்ளது. சீனத் தொழில் நிறுவனங்களின் சட்டப்பூர்வமான நலன் மற்றும் உரிமையைப் பேணிக்காக்க, சீனத் தரப்பு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றும் அவர் வலியுறுத்தினார்.