ஜனவரி திங்களில் விமான பயணிங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2024-02-21 11:19:48

இவ்வாண்டின் ஜனவரி திங்களில் விமான பயணிங்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. சர்வதேச விமான பயண சந்தையின் மீட்சி நிலைமை தொடர்ந்து உயர்ந்துள்ளது.

இவ்வாண்டின் ஜனவரி திங்களில் விமான பயணிங்களின் எண்ணிக்கை 5 கோடியே 42 இலட்சத்து 60 ஆயிரமாகும். இந்த எண்ணிக்கை தினமும் 17 இலட்சத்து 50 ஆயிரமாக, 2023ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில் இருந்ததை விட 13.5 விழுக்காடு அதிகம். 2023ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 44.6 விழுக்காடு அதிகம். தவிரவும், 2019ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 107.9 விழுக்காடு அதிகம். வசந்த விழாவுக்கான பயணி போக்குவரத்து காலத்தின் முதல் 6 நாட்களில் பயணிங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 இலட்சத்து 90 ஆயிரமாகும். தினத்திற்கு 19 இலட்சத்து 30 ஆயிரமாகும்.

ஜனவரி திங்களில், சீனாவின் 6 முன்னணி விமான நிறுவனங்களின் சர்வதேச பயணிங்களின் எண்ணிக்கை 41 இலட்சத்து 6 ஆயிரமாகும். இது, 2019ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்தத 73 விழுக்காட்டிற்குச் சமம்.