பிரிக்ஸ் நாடுகள் வளரும் நாடுகளுக்கு இடையே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
2024-02-22 19:40:36

போர், தலையீடு, இன ஒழிப்பு மற்றும் இன மேன்மை நிறைந்துள்ள பழைய காலனி உலகம், பிரிக்ஸ் நாடுகளின் தலைமையிலான புதிய உலகத்தால் மாற்றப்படுவதாக வெனிசுலா அரசுத் தலைவர் நிக்கோலசு மதுரோ அண்மையில் தெரிவித்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 22ஆம் நாள் கூறுகையில், தற்போதைய உலகில் இடர்பாடுகள் மற்றும் அறைகூவல்கள் இடைவிடாமல் ஏற்பட்டு வரும் பின்னணியில், வளர்ந்த நாடுகள் ஒற்றுமையுடன் முந்தி செல்தல், வெளிப்புறத் தலையீட்டை எதிர்த்தல், கூட்டு வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற விருப்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. இதனால் தான், புதிதாக விரைவாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் இடையே பிரிக்ஸ் நாடுகள், பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சர்வதேச அலுவல்களில் நிலைத் தன்மை மற்றும் நேர்மறையான ஆற்றலாகச் செயல்படுகின்றன என்று தெரிவித்தார்.