© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பாலஸ்தீன அரசு பதவியிலிருந்து விலகுவதாக அந்நாட்டின் தலைமையமைச்சர் முஹம்மது இப்ராஹிம் ஷ்டய்யே பிப்ரவரி 26ஆம் நாள் ரமல்லாஹ் நகரில் அறிவித்தார். ரஷியாவின் ஆர்.ஐ.ஏ நோவோஸ்டி நிறுவனம் 28ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் மற்றும் ஃபத்தாஹா இயக்கத்தின் பிரதிநிதிகள் 29ஆம் நாள் மாஸ்கோ நகரில் சந்திப்பு நடத்தி, ஒருங்கிணைப்பான பாலஸ்தீன அரசின் உருவாக்கம் மற்றும் காசா பிரதேசத்தின் புனரமைப்பு பற்றி விவாதம் நடத்தவுள்ளனர் என்று ரஷியாவுக்கான பாலஸ்தீனத் தூதர் தெரிவித்தார்.
மேலும், கிழக்கு ஜெருசலேம், ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரை, காசா உள்ளிட்ட பாலஸ்தீனத்தின் உரிமை பிரதேசங்களில் நடைபெறும் பாலஸ்தீன அரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தின் தேர்தலை, புதிய அரசு கண்காணிக்க வேண்டும் என்று பிரிட்டனுக்கான பாலஸ்தீனத் தூதர் 27ஆம் நாள் தெரிவித்தார்.