பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலால் சிரியாவின் நிலைமைக்கான பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும்:சீனா வேண்டுகோள்
2024-02-28 10:08:31

சிரியாவின் மனித நேய நிலைமை குறித்து ஐ.நா.பாதுகாப்பு அவையில் பிப்ரவரி 27ஆம் நாள் வெளிப்படையான கூட்டம் ஒன்று நடைபெற்றது. பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலால் ஏற்பட்ட பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். சிரிய பிரச்சினைகளை அரசியல் மூலம் தீர்ப்பதை முன்னேற்ற வேண்டும். மனித நேய நெருக்கடியைக் கூட்டாக தீர்க்க வேண்டும் என்று சீனப் பிரதிநிதி வேண்டுகோள் விடுத்தார்.

ஐ.நா.வுக்கான சீன நிரந்தரக் குழுவின் தற்காலிகத் தூதர் டேய் பிங் மூன்று கருத்துக்களை முன்வைத்தார். முதலாவது, பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் அதிகரித்து வருவதால், சிரியாவின் நிலைமைக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். இரண்டாவது, அரசியல் மூலம் சிரிய பிரச்சினையைத் தீர்ப்பதை முன்னேற்ற வேண்டும். கடைசியாக, சிரியாவின் மனித நேய நெருக்கடியைக் கூட்டாகத் தணிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.