வெளிநாட்டு முதலீட்டிற்கான 24 நடவடிக்கைகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் சீனா
2024-02-29 10:29:03

28ஆம் நாள் சீன வணிக அமைச்சகம் நடத்திய அன்னிய முதலீட்டு நிறுவன வட்டமேசை கூட்டத்தில் வெளியிட்டப்பட்ட தகவலின்படி, வெளிநாட்டு முதலீட்டிற்கான 24 நடவடிக்கைகளில் பெரும்பாலானவை நன்கு செயல்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகளின் செயல்பாட்டை விரைவுபடுத்துதலை ஊக்குவிக்கவும், செயலாக்க நிலையின் விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ளவும், அன்னிய முதலீட்டு நிறுவனங்களுக்கான கொள்கை நன்மைகளை மேம்படுத்தவும், சீன வணிக அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றும்.

சீனாவில் உள்ள அமெரிக்க வர்த்தக அமைப்பு, அமெரிக்க-சீன வணிக கமிட்டி, சீனாவில் உள்ள ஐரோப்பிய வணிகச் சங்கம் உள்ளிட்ட 9 வெளிநாட்டு வணிக அமைப்புகள், 60க்கும் மேற்பட்ட அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த வட்டமேசை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வணிக சூழலை மேம்படுத்த சீனா மேற்கொண்ட பெரும் முயற்சிகளை இக்கூட்டத்தில் பங்கேற்பாளர்கள் பாராட்டினர். சீனாவில் முதலீடு செய்வதில் அவர்கள் நம்பிக்கையை வலுப்படுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.