இந்திய கடற்படையினர் 3,300 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்
2024-02-29 16:52:48

இந்திய கடற்படை நாட்டின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்துடன் ஒருங்கிணைந்து, புதன்கிழமையன்று குஜராத் கடற்கரையில் ஒரு படகில் இருந்து சுமார் 3,300 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றியதாகவும், ஐந்து பேரைக் கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளது.

கடற்படையினரின் கூற்றுப்படி, அண்மைக்காலத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் இதுவாகும்.

சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இந்திய கடற்படை மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையானது, இந்தியாவின் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அவர்களின் உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.