ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் கூட்டம் துவக்கம்
2024-02-29 09:43:28

20நாடுகள் குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் கூட்டம் பிப்ரவரி 28ஆம் நாள் பிரேசிலின் சாவ் பாலோ நகரில் துவங்கியது. சமத்துவமின்மை நீக்கம், உலக எரியாற்றலின் மாற்றம் உள்ளிட்டவை 2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் அம்சமாகும்.  

சமத்துவமின்மைப் பிரச்சினையைச் சமாளிப்பதில் அரசியல் மற்றும் பொருளாதார பங்களிப்பு: நாட்டின் அனுபவம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு என்ற தலைப்பில் பிரேசில் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் காணொளி வழியாக சொற்பொழிவு ஆற்றினார்.