போர் நிறுத்தம் சர்வதேச சமூகத்தின் பெரும் குரலாகும்: சீனா
2024-03-01 10:24:01

ஐ.நா.வின் மனித உரிமை செயற்குழுவின் 55ஆவது கூட்டத்தொடரில், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலின் நிலைமை குறித்து ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வுக்கான அலுவலகம் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் சென் சூ, பிப்ரவரி 29ஆம் நாள் சீனாவின் நிலைப்பாட்டை விரிவாக எடுத்துரைத்தார்.

தற்போது காசா பிரதேசம் முன்னெப்போதும் கண்டிராத மனிதாபிமான பேரழிவினால் பாதிக்கப்பட்டு வருகிறது. போர் நிறுத்தத்தை உடனடியாக நனவாக்குவது சர்வதேசச் சமூகத்தின் பெரும் குரலாகவும், அமைதியை மீட்டெடுப்பதற்கான மிக அடிப்படையான கோரிக்கையாகவும் இருக்கின்றது என்று சீனப் பிரதிநிதி தெரிவித்தார்.

மனிதாபிமான நிறுவனங்கள் காசாவில் மீட்புதவிப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகளை வழங்க வேண்டும். எனச் சர்வதேச நீதிமன்றம் வெளியிட்ட இடைக்கால நடவடிக்கைகளையும் கட்டளைகளையும் பயனுள்ள முறையில் செயல்படுத்துமாறு சீனா இஸ்ரேலை வற்புறுத்தியது.