ரஷியாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தால் பதிலடி:லாவ்ரோவ்
2024-03-03 17:45:34

மேலை நாடுகள் ரஷியாவுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பறிமுதல் செய்தால், அதற்கு ரஷியா ஒரே மாதிரியான நடைமுறையில் பதிலடி அளிக்கும் என்று ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் 2ஆம் நாள் தெரிவித்தார்.

துருக்கியில் அந்தல்யா வெளியுறவு மன்றக் கூட்டத்தில் பங்கெடுத்துள்ள செர்ஜி லாவ்ரோவ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், மேலை நாடுகள் எந்த வழிமுறையிலும் ரஷியாவின் சொத்துக்களைக் கைபற்றினாலும், அது திருட்டுக்குச் சமம் என்று தெரிவித்தார்.

சமீபத்தில், சில மேற்கத்திய நாடுகள் ரஷ்ய வெளிநாட்டு சொத்துக்களை பறிமுதல் செய்யும் ஆலோசனையை எழுப்பியுள்ளது. அவ்வாறு செய்தால், ரஷியா பதிலடி கொடுக்கும் என்று பல மேலை நாடுகள் கவலைப்படுகின்றன.