தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் தலைமை அமைச்சருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2024-03-04 09:46:02

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் புதிய தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெபாஷ் ஷெரீபுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 3ம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், தலைமை அமைச்சர் ஷெபாஷ் ஷெரீப் மற்றும் புதிய அரசாங்கத்தின் தலைமையில், பாகிஸ்தான் பல்வேறு தரப்புகளின் ஒத்துழைப்பு முயற்சியுடன், தேசிய வளர்ச்சி மற்றும் முன்னேற்ற இலட்சியத்தில் பாகிஸ்தான் மேலதிகமான புதிய சாதனைகளைப் பெறுவது உறுதி என்று குறிப்பிட்டார்.

அதே நாள் சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங்கும் ஷெபாஷ் ஷெரீபுக்கு வாழ்த்து தகவல் அனுப்பினார்.