2023இல் சீனாவின் லித்தியம்-அயன் பேட்டரின் உற்பத்தி அதிகரிப்பு
2024-03-04 20:10:39

2023ஆம் ஆண்டில் சீனாவின் லித்தியம்-அயன் மின்கலம் தொழில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்தது. லித்தியம்-அயன் மின்கலம் தொழில் விவரக்குறிப்பு அறிவிப்பில் உள்ள நிறுவனத் தகவல் மற்றும் தொழில் சங்க மதிப்பீடுகளின்படி, நாடு முழுதும் மொத்த லித்திய மின்கலம் திறன் மணிக்கு 940 ஜிகாவாடைத் தாண்டியது. இது 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 25 விழுக்காடு அதிகமாகும். மொத்த தொழில் உற்பத்தி மதிப்பு, ஒரு இலட்சத்து 40ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது.

தவிரவும், ஆண்டு முழுவதும் லித்திய மின்கலத் தயாரிப்புகளின் விலையும் தெளிவாகக் குறைந்தன.