சி.பி.பி.சி.சி துவக்க விழாவில் ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் பங்கேற்பு
2024-03-04 15:10:34

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 2ஆவது கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாள் மாலை 3மணியளவில் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் இக்கூட்டத்தொடரின் துவக்க விழாவில் பங்கேற்றனர்.