2024ஆம் ஆண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடு
2024-03-05 09:37:18

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 5 விழுக்காட்டு அளவில் அதிகரிப்பது 2024ஆம் ஆண்டு சீனப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் செவ்வாய்கிழமை துவங்கிய தேசிய மக்கள் பேரையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் அரசுப் பணியறிக்கையை வழங்கியபோது  சுட்டிக்காட்டினார்.

மேலும், நுகர்வோர் விலைவாசிக் குறியீடு 3 சதவீதம் உயர்வது, குடிமக்களின் வருமானம் பொருளாதார வளர்ச்சியுடன் ஒரே மாதிரியாக அதிகரிப்பது, தானிய உற்பத்தி 65000 கோடி கிலோகிராமை எட்டுவது உள்ளிட்ட பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான இலக்குகள் இந்த பணியறிக்கையில் கூறப்பட்டுள்ளது.