2023ஆம் ஆண்டில் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் சீனாவின் முதலீட்டுத் தொகை:3.3 இலட்சம் கோடி யுவான்
2024-03-05 14:53:34

2023ஆம் ஆண்டில் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் சீனாவின் முதலீட்டுத் தொகை 3.3 இலட்சம் கோடி யுவானைத் தாண்டி, முந்தைய ஆண்டை விட 8.1 விழுக்காடு அதிகம் என்று 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரில் மார்ச் 5ஆம் நாள் காலை சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் யின் ஹே ஜுன் செய்தியாளர்களிடம் கூறினார்.

2023ஆம் ஆண்டில், குவாண்டத் தொழில் நுட்பம், ஒருங்கிணை மின் சுற்றுகள் அமைப்பு, செயற்கை நுண்ணறிவு, உயிரி மருத்துவம் மற்றும் மருந்து, புதிய எரியாற்றல் முதலிய துறைகளில் முக்கிய சாதனைகளைச் சீனா அடைந்துள்ளது. 4வது தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட உலகின் முதலாவது அணு மின் நிலையம் இயங்கியுள்ளது. சி919 பெரிய பயணியர் விமானம் வணிக ரீதியில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.