2023இல் சீன மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு 5.2%
2024-03-05 09:35:16

சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத் தொடர் மார்ச் 5ஆம் நாள் காலை 9மணிக்கு பெய்ஜிங்கில் துவங்கியது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் இத்துவக்க விழாவில் கலந்து கொண்டனர். அரசவையின் தலைமை அமைச்சர் லீச்சியாங் அரசு பணியறிக்கையை வழங்கினார்.

2023ம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக சீரான வளர்ச்சி பெற்றுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 1.26 கோடி கோடி யுவானைத் தாண்டி, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 5.2 விழுக்காடு அதிகரித்தது. இவ்வளர்ச்சி வேகம், உலகின் முக்கிய பொருளாதார நாடுகளின் முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20வது தேசிய மாநாட்டின் எழுச்சியைச் செயல்படுத்திய முதல் ஆண்டு மற்றும் நடப்பு அரசாங்கம் சட்டத்தின்படி பொறுப்பேற்ற முதல் ஆண்டாகும். முழு ஆண்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதானமான சமூக நிலைமையில், சோஷலிச நவீனமயமான நாட்டை பன்முகங்களிலும் கட்டியமைக்கும் பாதையில் சீனா, உறுதியான காலடி எடுத்து வைத்து வருகிறது என்று இப்பணியறிக்கையில் குறிப்பிடப்பட்டது.