இலங்கையில் காலநிலை நடவடிக்கைக்கான உலகளாவிய பரிமாற்றப் பயிலரங்கு
2024-03-05 19:36:54

ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய ஆசியா, அரபு நாடுகள் பகுதி ஆகியவற்றைச் சேர்ந்த 16 நாடுகள், இலங்கையில் காலநிலை நடவடிக்கைக்கான உலகளாவிய பரிமாற்றப் பயிலரங்கில் பங்கெடுத்துள்ளன. இப்பயிலரங்கு வியாழக்கிழமை நிறைவடையும் என்று ஐ.நா.வளர்ச்சி திட்ட அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

பல்வேறு நாடுகள் தங்களின் சிறப்பு அனுபவங்களைப் பகிர்வது, சாதனைகளைக் கொண்டாடுவது, பணிகளில் கிடைக்க பெற்றுள்ள படிப்பினைகளை ஆராய்வது ஆகியவை, இப்பயிலரங்கை நடத்துவதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தவிர, 2030ஆம் ஆண்டுக்குள் பசுங்கூடவாயு வெளியேற்றத்தை 14.5விழுக்காடு குறைக்கும் இலங்கையின் இலட்சியத்துக்கு ஆதரவு அளிக்கும் வினையூக்கக் கருவியாக, காலநிலை வாக்குறுதி உள்ளது என்று இலங்கையிலுள்ள ஐ.நா.வளர்ச்சித் திட்ட அலுவலகப் பிரதிநிதி அசுசா குபோடாதெரிவித்தார்.