தென் சீனா கடற்பகுதி:தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய சீனா
2024-03-05 20:51:21

மார்ச் 5ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சகத்தின் நிலையான செய்தியாளர் கூட்டத்தில் பிலிப்பைன்ஸ் செனெட் அவை கடற்பகுதி சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மீது சீனாவின் நிலைப்பாடு பற்றி செய்தியாளர் கேள்வி கேட்டார். பிலிப்பைன்ஸின் செயல்பாடு, தென் சீனா கடற்பகுதியில் சீனாவின் உரிமை பிரதேசத்தின் இறையாண்மையையும் கடலில் உரிமையையும் கடுமையாக அத்துமீறியுள்ளது. சீனா பிலிப்பைன்ஸுக்கு உறுதியான எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், பிலிப்பைன்ஸ் சீனாவின் உரிமை பிரதேசத்தின் இறையாண்மைக்கும் கடலில் உரிமைக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். சர்ச்சையை அதிகப்படுத்துவது நிலைமையை மேலும் சிக்கலாக்குவது உள்ளிட்ட ஒரு சார்ப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பேச்சுவார்தை மூலம் கருத்து வேற்றுமையைத் தீர்க்கும் வழிக்கு வெகுவிரைவில் திரும்பி, சீனாவுடன் இணைந்து இரு தரப்புறவையும் தென் சீனா கடலின் நிதானத்தையும் பேணிகாக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.