இவ்வாண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி சுமார் 5 விழுக்காடு இலக்கு
2024-03-06 16:24:47

சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரின் செய்தியாளர் கூட்டம் ஒன்று 6ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

இவ்வாண்டு சுமார் 5 விழுக்காடு சீனப் பொருளாதார வளர்ச்சி இலக்காக இருக்கும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 14 ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் வருடாந்திர கோரிக்கையை இது உள்ளடக்கியது. இது முயற்சியுடன் அடையக்கூடிய குறிக்கோளாகும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் இயக்குநர் ஜெங் ஜா ஜெ தெரிவித்தார்.