உலகத்துடன் வளர்ச்சி வாய்ப்பைப் பகிரும் மனயுறுதி மாறாது:சீனா
2024-03-06 19:20:48

சீனாவில் நடைபெற்று வரும் சி.பி.பி.சி.சி. மற்றும் என்.பி.சி ஆகிய இரு கூட்டத்தொடர்களில் பங்கெடுத்த சீனாவுக்கான பல வெளிநாட்டு தூதர்களும் அதிகாரிகளும் கூறுகையில், சீனாவின் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதோடு, சீனாவின் உயர்தர வளர்ச்சி மற்றும் உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பினால், உலகம் பலன்கள் அடையும் என்று கருதுவதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 6ஆம் நாள் கூறுகையில்,

இரு கூட்டத்தொடர்கள் என்பது, சீன அரசியலில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், வெளியுலகம் சீனாவைப் புரிந்து கொள்ளும் முக்கிய ஜன்னலாகவும் திகழ்கின்றது என்று தெரிவித்தார். சீனாவுக்கான வெளிநாட்டு தூதர்களும் அதிகாரிகளும் இரு கூட்டத்தொடர்களில் பங்கேற்று சீனாவை பற்றி அறிந்து கொள்வதை வரவேற்கிறோம் என்றும், தலைமையமைச்சர் லீச்சியாங் வழங்கிய அரசுப் பணியறிக்கையிலிருந்து கிடைக்க பெற்றுள்ள முக்கியத் தகவல்களில் ஒன்றாக, சீனா உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கி, பரஸ்பரம் பலன் தரும் கூட்டு வெற்றியை முன்னேற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.