காசா பகுதியில் போர் நிறுத்தம் பற்றி அமெரிக்காவின் தடை மீது சீனா ஏமாற்றம்
2024-03-06 11:04:33

காசா பகுதியில் போர் நிறுத்தம் என்ற வேண்டுகோள் தொடர்பான வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது குறித்து மார்ச் 5ஆம் நாள் ஐ.நா. பொது பேரவையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

காசா பகுதியில் மோதல் மூண்ட பிறகு கிட்டத்தட்ட ஐந்து மாதங்களில், ஐ.நா. பாதுகாப்பவையின் போர் நிறுத்த கோரிக்கையை அமெரிக்கா நான்காவது முறையாக நிராகரிப்பது மீது, சீனா ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது என்று ஐ.நாவுக்கான சீனாவின் துணை நிரந்தர பிரதிநிதி கெங் ஷுவாங் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் அவசியமானது. சர்வதேச சமூகம் மிக வலிமையான அவசர உணர்வு மற்றும் மிகப்பெரிய அரசியல் உறுதியுடன், உடனடியாக போர் நிறுத்தத்தை முன்னெடுக்க வேண்டும். ரஃபா மீதான தாக்குதல் திட்டத்தை ரத்து செய்யுமாறு இஸ்ரேலை சீனா வலியுறுத்துகிறது என்று தெரிவித்தார்.