ரென்அய் தீவு உள்ளிட்ட நான்சா தீவுகளின் மீது சீனா அரசுரிமை கொண்டுள்ளது
2024-03-06 20:07:10

சீன வெளியுறவு அமைச்சகம் 6ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், தென் சீனா கடல் பற்றிய பிரச்சினையில்  சீனாவின் நிலைப்பாடு மற்றும் கருத்துக்களைக் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.

இதற்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் அவரது கேள்விக்குப் பதிலளிக்கையில், ரென்அய் தீவு, சீனாவின் நான்சா தீவுகளின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்தார். ரென்அய் தீவு உள்ளிட்ட நான்சா தீவுகள், அதன் அருகிலுள்ள கடல்பரப்பு ஆகியவற்றின் மீது சீனா விவாதத்துக்கு இடமில்லாத அரசுரிமை கொண்டுள்ளது. இது, நீண்டகால வரலாற்று முன்னேற்றப் போக்கில் உருவாக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு, ஐ.நா சாசனம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும் பொருந்தியது என்றும் மாவ்நிங் வலியுறுத்தினார்.