அமெரிக்காவின் உட்கட்சி தேர்தல்
2024-03-06 14:38:18

மார்ச் 5ஆம் நாள், ஏ.பி எனும் செய்திஊடகம் வெளியிட்ட செய்தியின்படி, அரசுத் தலைவர் பதவிக்கான அமெரிக்கக் குடியரசு கட்சியின் வேட்பாளரும், ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் பிரதிநிதியுமான நிக்கி ஹேலி வெர்மான்ட் மாநிலத்தில் 2024ஆம் ஆண்டுக்கான, அரசுத் தலைவர் தேர்தலின் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

இவ்வாண்டில் இக்கட்சியின் உட்கட்சி தேர்தலில் 2ஆவது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்பு, வாஷிங்டன், டி. சியில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.