இலங்கையின் காலே துறைமுகத்தின் வளர்ச்சி திட்டம்
2024-03-07 19:43:47

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலே துறைமுகத்தை வணிக மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நடக்கும் இடமாக வளர்ப்பது பற்றிய முன்மொழிவுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்நாட்டு அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் பந்துல குணவர்தன 7ஆம் நாள் தெரிவித்தார்.

அதற்கு, அரசு மற்றும் தனியார் என கூட்டு ஒத்துழைப்பு முறையின் கீழ், முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வது பற்றிய முன்மொழிவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தெற்காசியாவில் முழு அளவிலான சுற்றுலா சார் துறைமுகமாகவும் பொழுதுப்போக்கு இடமாகவும் அமைக்க, காலே துறைமுகத்துக்கு 17கோடியே 50இலட்சம் முதல் 20கோடி அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது.