சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா விலக்கு கொள்கை : சீனா அறிவிப்பு
2024-03-07 14:31:31

சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா விலக்கு கொள்கை விரைவில் தொடங்க உள்ளது என்று  சீன வெளியுறவு அமைச்சகம் 7ஆம் நாள் அறிவித்தது. இந்த கொள்கை, சீனா மற்றும் வெளிநாடுகளுக்கிடையே மக்கள் தொடர்பை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024ஆம் நாள் மார்ச் 14ஆம் நாள் முதல் நவம்பர் 30ஆம் நாள் வரை சோதனை முறையில் அமலுக்கு வரும் புதிய கொள்கையின்படி, இந்த  6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைவுச் சீட்டுகளுடன் விசா  தேவையின்றி சீனாவுக்கு வருகை தந்து அதிகபட்சமாக 15 நாட்களுக்கு வணிகம் செய்வது, சுற்றுலா பயணம் மேற்கொள்வது, உறவினரை சந்திப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட அனுமதிக்கப்படுவர். விசா விலக்குக்கு தகுதியற்றவர்கள் தொடர்ந்து விசா விண்ணப்பித்து பெற வேண்டும்