உடனடி போர் நிறுத்தம் என்பதை முதன்மை கடமையாக வைக்க வேண்டும்:சீன வெளியுறவு அமைச்சர்
2024-03-07 11:26:20


சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் கூட்டம் மார்ச் 7ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ இக்கூட்டத்தில் பங்கெடுத்து, சீனாவின் தூதாண்மை கொள்கை மற்றும் வெளிநாட்டுறவு பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அவர் கூறுகையில், சர்வதேச சமூகம், உடனடி போர் நிறுத்தம் என்பதை முதன்மை கடமையாக வைக்க வேண்டும். காசாவிலுள்ள மக்களுக்கு உலகத்தில் வாழ்வதற்கான உரிமை உண்டு. ஐ.நாவின் அதிகாரப்பூர்வ உறுப்பு நாடாக பாலஸ்தீனம் மாறுவதற்கு சீனா ஆதரவு அளிக்கிறது என்றார்.